வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அண்ணா பிறந்தநாள்: சிலைக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின்

சென்னை - வள்ளுவர் கோட்ட முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார்.

News image
அண்ணா பிறந்தநாள்: சிலைக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின்
Updated On :15 செப்டம்பர் 2020, 4:28 am

DIN

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை - வள்ளுவர் கோட்ட முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார்.

பின்னர், அண்ணா அறிவாலயத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தும், பேரறிஞர் அண்ணா மற்றும் கரணாநிதியின் திருவுருப் படங்கள் மற்றும் திருவுருவச் சிலைகளுக்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி, ஸ்டாலின், முகநூல் வழியாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வீழ்ந்து கிடந்த தமிழினத்தை தனது பேச்சால், எழுத்தால், செயலால் எழுச்சி பெற வைத்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாள் இன்று! அவர் ஊட்டிய இன எழுச்சி, மொழி உணர்ச்சி, மாநில சுயாட்சி ஆகிய மூன்று கொள்கைத் தீபங்களை எந்நாளும் காப்போம்! அவர் வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை எந்நாளும் கடைப்பிடிப்போம்! அண்ணா வாழ்கிறார், வாழ்விப்பார் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.