ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தமிழகத்தில் புதிதாக 5,560 பேருக்கு தொற்று உறுதி; ஒரேநாளில் 59 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 5,560 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.17, வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 59 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :17 செப்டம்பர் 2020, 12:48 pm

தமிழகத்தில் புதிதாக 5,560 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.17, வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 59 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,560 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 5,555.  வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 5 பேர். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 5,25,420 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 992 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இன்றைய செய்திக் குறிப்பில், மேலும் 59 பேர் (அரசு மருத்துவமனை-36, தனியார் மருத்துவமனை -23) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 8,618 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று ஒரேநாளில் 5,524 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,70,192 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, 46,610 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அதிகபட்சமாக 84,524 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 62,17,923 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

கரோனா பரிசோதனைக்காக அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 108 என மொத்தம் 174 பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.