மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிடக்கோரி ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

யில்வே துறையை தனியார் மயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
ரயில்வே துறையை தனியார் மயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டரயில்வே ஊழியர்கள்
Updated On :18 செப்டம்பர் 2020, 6:43 am

DIN


திருவாரூர்: ரயில்வே துறையை தனியார் மயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் ரயில் நிலையத்தில் எஸ் ஆர் எம் யு தொழிற்சங்கத்தின் சார்பில் ரயில்வே ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே துறையை மத்திய அரசு தனியார் மயமாக்கக் கூடாது, 150 ரயில்களையும் மற்றும்  சரக்கு ரயில்களையும் தனியாருக்குத் தரும் முடிவை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும்.

முப்பது வருட அனுபவம் அல்லது 55 வயது பூர்த்தி செய்த ஊழியர்கள் என்ற அடிப்படையில் ரயில்வே ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு என மிரட்டக் கூடாது, 2500 டீசல் லோகோக்கலை உடைத்து விற்பது என ஆயிரக்கணக்கான உதவியாளர்கள் மற்றும்  உங்களின் தொழில்நுட்ப வல்லுநர்களின் நிரந்தர வேலைவாய்ப்பைப் பறிக்கக்கூடாது.

Story image

பயணிகள் ரயில் ரத்து, ரயில் நிறுத்தங்கள், க்யூ ஆர்க் கோடு என்ற பெயரால் டிராபிக் தொழிலாளர்கள் மற்றும்  டிக்கெட் பரிசோதனை  தொழிலாளர்களின் வேலைகளைப் பறிக்கக்கூடாது,  1974இல் போனசிற்காக வேலைநிறுத்தம் செய்த லட்சக் கணக்கானோரின் போராட்டத்தில் கிடைத்த பி எல் பி போனஸை பறிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ரயில் நிலையத்தில் ஏராளமான ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.