தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 14,458 கன அடியிலிருந்து 13,001 கன அடியாக குறைந்துள்ளது.  

News image
மேட்டூர் அணை
Updated On :18 செப்டம்பர் 2020, 6:11 am

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 14,458 கன அடியிலிருந்து 13,001 கன அடியாக குறைந்துள்ளது.  

வியாழக்கிழமை காலை அணைக்கு நொடிக்கு 14,458 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை 13,001 கன அடியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.35 அடியாக இருந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 18 ஆ.யிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுளளது. 

ஆணையின் நீர் இருப்பு 55.24 டிஎம்சி ஆக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.