மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

நீட்  தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் சங்ககிரியில் ஆர்ப்பாட்டம் 

நாம் தமிழர் கட்சியில் சார்பில் நீட்  தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி  சேலம் மாவட்டம், சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றன. 

News image
நாம் தமிழர் கட்சி சார்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர். 
Updated On :27 ஜனவரி 2024, 5:22 pm

DIN


சங்ககிரி: நாம் தமிழர் கட்சியில் சார்பில் நீட்  தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி  சேலம் மாவட்டம், சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றன. 

சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி இளைஞர் பாசறை செயலர் ரா.ராகுல்பாண்டியன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.  சங்ககிரி ஒன்றிய செயலர் ஏ.சீனிவாசன் முன்னிலை வகித்தார்.  மகளிர் பாசறை செயலர் எஸ்.பெர்சியா, சங்ககிரி, தாரமங்கலம், மகுடஞ்சாவடி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள்  இதில் கலந்து கொண்டனர். 

நீட் தேர்வினால் ஏழை மாணவர்களின் மருத்துவராக முடியாத நிலை ஏற்பட்டு வருகின்றன. பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவே  மத்தியரசு நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்பன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.