வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

விவசாயிகள் மசோதா குறித்து விவாதிக்க 21-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: திமுக

விவசாயிகளுக்கு விரோதமான மத்திய அரசின் மசோதாக்கள் குறித்து விவாதிக்க வரும் திங்கள்கிழமை காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

News image
விவசாயிகள் மசோதா குறித்து விவாதிக்க 21-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: திமுக
Updated On :19 செப்டம்பர் 2020, 7:54 am

DIN


சென்னை: விவசாயிகளுக்கு விரோதமான மத்திய அரசின் மசோதாக்கள் குறித்து விவாதிக்க வரும் திங்கள்கிழமை காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 விவசாய சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு விரோதமான மத்திய அரசின் மசோதாக்கள் குறித்து விவாதிக்க, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக 21ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
இந்த தோழமைக் கட்சிக் கூட்டத்தில் விவசாய மசோதாக்கள் குறித்து கட்சித் தலைவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.