சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சென்னையில் புதிதாக 989 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,348 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :22 செப்டம்பர் 2020, 12:46 pm

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,348 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 5,52,674 ஆக உயர்ந்துள்ளது.

இதில், அதிகபட்சமாக சென்னையில் இன்று 989 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 1,57,614 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 4,348 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய பாதிப்பில், சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில் 595 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 369 பேருக்கும் தொற்று உறுதி ஆகியுள்ளது.

மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.