காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

அகரம் அகழாய்வில் 20 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் வியாழக்கிழமை 20 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. 

News image

திருப்புவனம் அருகே அகரத்தில் நடந்து வரும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 20 அடி உயர உறைக்கிணறு

Updated On :24 செப்டம்பர் 2020, 1:22 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் வியாழக்கிழமை 20 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. 

கீழடியில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி முதல் 6 ஆம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. அருகேயுள்ள அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை இப்பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொன்மையான பொருள்கள், கட்டிட அமைப்புகள், சுவர்கள், வடிகால் வசதி , மனிதர்கள், குழந்தைகளின் எலும்புகள், விலங்கு வகை எலும்புகள் மற்றும் குறைந்த அடுக்கு கொண்ட உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

செப்டம்பர் 3- ந் தேதியுடன் கீழடியில் நடந்து வரும் அகழாய்வுப் பணிகள் நிறைவு பெறுகின்றன. இந்நிலையில் அகரத்தில் நடந்து வரும் அகழாய்வில் 20 அடுக்குகளுக்கும் மேல் உள்ள வட்ட வடிவிலான உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 6ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த உறைகிணறுகளின் உயரத்தை விட தற்போது இங்குக் கிடைத்துள்ள உறைகிணறு அதிக உயரம் கொண்டதாக உள்ளது. இந்த உறைகிணறு கிடைத்த இடத்தில் தோண்டப்பட்டு வரும் குழியின் ஆழத்தின் அளவு அதிகரிக்கும் போது உறைகிணற்றின் அடுக்குகளும் உயருவதற்கான வாய்ப்புள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.