நெல்லை அருகே கணவன் - மனைவி தூக்கிட்டுத் தற்கொலை
திருநெல்வேலி அருகே கணவன் - மனைவி சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

நெல்லை அருகே கணவன் - மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நெல்லை அருகே கணவன் - மனைவி தூக்கிட்டுத் தற்கொலை
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கணவன் - மனைவி சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
திருநெல்வேலி அருகே உள்ள தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகரைச் சேர்ந்தவர் பெயிண்டர் மாரியப்பன்(35). இவரது மனைவி வடிவு(27). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தை இல்லை. இது தொடர்பாக இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை காலையில் இவர்களின் வீடு திறக்கப்படாமலே இருந்ததால், பக்கத்தில் உள்ள உறவினர்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது, கணவன், மனைவி இருவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து தச்சநல்லூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரின் உடல்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தம்பதியினரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...