சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

குவளைவேலியில் பழுதாகிக் கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் குவளைவேலி ஊராட்சியில் அமைக்கப்பட்ட சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் பழுதடைந்து இருப்பதால் இதை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்

News image
மானாமதுரை ஒன்றியம் குவளைவேலி ஊராட்சியில் பழுதாகிக் கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்.
Updated On :27 ஜனவரி 2024, 5:26 pm

வாழ்வியல் வழிகாட்டி ஆர். கே


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் குவளைவேலி ஊராட்சியில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது. இதைப் பழுதுநீக்கிப் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

குவளைவேலி ஊராட்சியில் வசிக்கும் மக்களின் தாகம் தணிக்க அமைக்கப்பட்ட குடிநீர் திட்டத்திலிருந்து விநியோகம் செய்யப்படும் தண்ணீர் உவர்ப்புத்  தன்மையுடன் இருந்ததால் இந்த ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க கடந்த சில மாதங்களுக்கு முன் ஊராட்சி நிதி மூலம் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் (பியூர் வாட்டர் பிளாண்ட்) அமைக்கப்பட்டது.

இந்தக் குடிநீர் இயந்திரத்திலிருந்து குவளைவேலி கிராம மக்கள் குடிநீர் பிடித்துச் சென்று பயன்படுத்தி வந்தனர். 

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதுவரை இந்த இயந்திரம் சரி செய்யப்படாத நிலையில் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முடியாமல் கிராம மக்கள் உப்புத் தண்ணீரையே குடிநீராகவும் பயன்படுத்தி வரும் நிலை உள்ளது. 

இது குறித்து குவளைவேலி ஊராட்சித் தலைவர் ரவி கூறுகையில், பழுதாகிப்போன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தைப் பழுதுபார்த்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மானாமதுரை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. இதனால் பழுதாகிக் கிடக்கும் மேற்கண்ட இயந்திரம் மேலும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே விரைவில் இந்த இயந்திரத்தை பழுது பார்த்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.