பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நாமக்கல்: 3 லாரிகள், ஆம்புலன்ஸ் அடுத்தடுத்து மோதிய விபத்தில் மூவர் படுகாயம்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் மீது மற்றொரு லாரி மோதியதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர

News image
நாமக்கல்: 3 லாரிகள், ஆம்புலன்ஸ் அடுத்தடுத்து மோதிய விபத்தில் மூவர் படுகாயம்
Updated On :29 செப்டம்பர் 2020, 4:35 am

DIN

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் மீது மற்றொரு லாரி மோதியதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

Story image

மூன்று லாரிகள், ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பெரியசாமி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் , தலைமைக் காவலர் பார்த்திபன் உள்பட 3 பேர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.       

Story image

ஏற்கனவே விபத்து நடந்த இடத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு இருக்கும் போது பின்னால் வந்த லாரி வேகமாக மோதியதால் இந்த விபத்து நடந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story image

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலையில் அடிபட்டு கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.