தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருச்சியில் விவசாய சங்க  நிர்வாகி உள்பட  2 பேர் கைது

திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை பணிக்கு ஏரி, குளங்களில் மண் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த விவசாய சங்க நிர்வாகி உள்பட 2 பேரை துவாக்குடி போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

News image
உண்ணாவிரதம் இருந்த விவசாய சங்க நிர்வாகி
Updated On :30 செப்டம்பர் 2020, 4:33 am

DIN

திருச்சி: திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை பணிக்கு ஏரி, குளங்களில் மண் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த விவசாய சங்க நிர்வாகி உள்பட 2 பேரை துவாக்குடி போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக 13 ஏரி குளங்கள் வழியாக சாலை அமைக்கும் பணி அவ்வழியாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த ஏரி குளங்களில் மண் கொட்டி நிரப்பினால் விவசாய பணிகள் பாதிக்கும் என கூறி விவசாய சங்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்றம் இதற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கடந்த 2 நாள்களாக ஏரி குளங்களில் மண் கொட்டி நிரப்பும் பணி தொடங்கியது. இதற்கு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று காலை தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.பா.சின்னதுரை மற்றும் ஜனநாயக சமூக நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் ஆகிய இருவரும்  இன்று அதிகாலை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதை அறிந்த துவாக்குடி போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.