திருச்சி அருகே வேன் கவிழ்ந்து பெண் ஒருவர் பலி; 18 பேர் காயம்
திருச்சி 16ஆம் நாள் காரியத்திற்காக நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி வந்த வேன் கவிழ்ந்து பெண் ஒருவர் பலியானார். மேலும், 18 பேர் படுகாயம் அடைந்தனர்.


திருச்சி 16ஆம் நாள் காரியத்திற்காக நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி வந்த வேன் கவிழ்ந்து பெண் ஒருவர் பலியானார். மேலும், 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இருந்து 18 பேர் ஸ்ரீரங்கத்தில் துக்க காரியம் செய்ய, வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்தனர். முசிறி கருப்பம்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது வளைவில் வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியைச் சேர்ந்த சம்பூர்ணம் (55) பலியானார். மேலும், உடன் பயணித்த 18 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி போலீஸார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...