தமிழகத்தில் புதிதாக 69 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:
"தமிழகத்தில் 253 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடிந்தவர்கள் 27,416. தமிழகத்தில் புதிதாக இரண்டு ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுவரை 5,305 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 690 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு புதிதாக 69 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் தில்லி சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் எண்ணிக்கை 63. மற்ற மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இது தவிர்த்து உள்ள மற்ற மூன்று பேரில் ஒருவர் வெளிமாநிலப் பயணம் மேற்கொண்டுள்ளார், மற்றொருவர் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டவருடன் தொடர்பில் இருந்துள்ளார், மற்றொருவருக்கு தொற்று ஏற்பட்டதன் காரணம் குறித்து கண்டறியப்பட்டு வருகிறது." என்றார்.
இது தவிர்த்து கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பெண் ஒருவர் இன்று பலியாகியுள்ளார். இதன்மூலம், தமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


