சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 43 இடங்களில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்தார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 'கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் 43 இடங்களில் பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த 43 இடங்களில் மொத்தம் 9 லட்சம் மக்கள் இருக்கின்றனர். தொடர்ந்து சென்னை முழுவதும் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தப்படுகிறது. ஆய்வில் யாருக்காவது கரோனா இருப்பது கண்டறியப்பட்டால் அப்பகுதியில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்படும்.
சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த இருவருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு சென்ற 3,300 பேரை ஆய்வு செய்ததில் இதுவரை யாருக்கும் கரோனா இல்லை.
சென்னையில் வீடு, வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளும் பணியில் தன்னார்வலர்கள் பலரும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். மேலும், 100 வீடுகளுக்கு ஒரு ஊழியர் என்ற வகையில் கணக்கெடுப்பு நடக்கிறது' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


