தமிழகத்தில் புதிதாக 106 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை (ஞாயிற்றுகிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:
"தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 39,041. 162 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 58,189. தமிழகத்தில் 14 அரசு ஆய்வகங்கள், 9 தனியார் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தினசரி 2,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன
இதுவரை 10,655 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 1,075 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு புதிதாக 106 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 16 பேர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நேரடியாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மீதமுள்ள 90 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
தமிழகத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் புதிதாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் மொத்தம் 50 பேர் குணமடைந்துள்ளனர்." என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவசரத் தேவை இன்னொரு எஸ்ஐஆர்!

ஜனநாயகப் போரில் தமிழ்நாடு வெல்லும்: கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்

மருத்துவம் மக்களின் நம்பிக்கை: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீதம் வாக்குப்பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


