தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா தடுப்புப் பணிக்கு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்குக: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

கரோனா தடுப்புப் பணிக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

News image
Updated On :27 ஏப்ரல் 2020, 10:50 am

கரோனா தடுப்புப் பணிக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

கரோனா தடுப்பில் மேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டார். 

அப்போது தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் விவரம் பின்வருமாறு:

தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு அனுமதித்துள்ள பணிகள் தமிழகத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் 1885 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,020 பேர் (54%) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிவோருக்கு ஊதியத்தை ரொக்கமாக வழங்க அனுமதி அளிக்க வேண்டும். வங்கிக் கணக்குகளில் அளிப்பதால் அவர்கள் வங்கிகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அனுமதி வழங்க வேண்டும். 

சிறு, குறு தொழில் துறையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஜிஎஸ்டி, வருமான வரி செலுத்த 6 மாத அவகாசம் அளிக்க வேண்டும். 

கரோனா சிகிச்சைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை வழங்க வேண்டும்.

பி.சி.ஆர். பரிசோதனைக் கருவிகளை மத்திய அரசு கூடுதலாக வழங்க வேண்டும். 

விவசாயப் பொருள்கள் போக்குவரத்துக்கான மானியம் வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.