கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை என தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 121 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 2,058 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் கரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவலை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கரோனா தடுப்புப் பணிக்கு ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்ககளை பயன்படுத்த தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மத்திய ஆயுதப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் 40 முதல் 50 வயதுக்குட்பட்டோர், காவல்துறையுடன் இணைந்து கரோனா தடுப்பு பணியில் ஈடுபட விரும்புவோர், அந்தந்த மாவட்ட எஸ்.பி., மாநகர ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்
இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி

கடும் வெயிலிலும் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டையில் வாக்களிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


