மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது.
இந்நிலையில், வருகிற மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரோனா தடுப்புப் பணிக்காக உருவாக்கப்பட்ட 19 மருத்துவ நிபுணர் குழுவுடன் கரோனா பரவல் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
கடந்த முறையும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்னரே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்
இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி

கடும் வெயிலிலும் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டையில் வாக்களிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


