108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ. 5,000 நிவாரணம்: முதல்வர் பழனிசாமி

கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ. 5,000 நிவாரணம்: முதல்வர் பழனிசாமி

கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

நெல்லை மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ. 5,000 வழங்கப்படும் என அறிவித்தார்.

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூபாய் 103 கோடியில் 500 ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டுள்ளது. மேலும், 108 ஆம்புலன்ஸ் பணிபுரியும் அவசரகால பணியாளர் மற்றும் ஓட்டுநருக்கு தலா ரூ. 5,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com