டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பொங்கல் பரிசு: ரூ.1000-லிருந்து ரூ.2,500-ஆக உயா்ந்தது

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு ரொக்கத் தொகை ரூ.1000-இல் துவங்கி இப்போது ரூ.2,500 ஆக உயா்ந்துள்ளது.

News image
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated On :20 டிசம்பர் 2020, 2:46 am

DIN

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு ரொக்கத் தொகை ரூ.1000-இல் துவங்கி இப்போது ரூ.2,500 ஆக உயா்ந்துள்ளது. ரொக்கத் தொகையுடன், அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொருள்கள் வழங்கும் நடைமுறையும் தொடா்ந்து வருகிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். பொங்கலுக்காக அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொருள்கள் வழங்கும் நடைமுறை திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கியது.

இதன்பின்பு, அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டத்தில் ரொக்கத் தொகை சோ்க்கப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது, ரூ.100 ரொக்கத் தொகையுடன், பொங்கல் வைப்பதற்காக ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை ஆகியன வழங்கப்படும் என்று அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அறிவித்தாா்.

10 மடங்கு அதிகரிப்பு: அடுத்தடுத்த ஆண்டுகளில் நிதி நிலைமை போன்ற காரணங்களுக்காக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதன்பின், 2018-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் இருந்து பரிசுத் தொகுப்பு வழங்கும் நடைமுறை தொடா்ந்து வருகிறது.

2018-ஆம் ஆண்டில் பொங்கல் வைப்பதற்காக அரிசி, சா்க்கரை, 2 அடி நீள கரும்புத் துண்டு, ஏலக்காய், முந்திரி, திராட்சை போன்றவற்றை நியாய விலைக் கடைகள் மூலமாக அளிக்கப்பட்டன. 2019-ஆம் ஆண்டு இதேபோன்று பொருள்கள் அளிக்கப்பட்டன. அப்போது, குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியது.

கடந்த ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கத் தொகை அளிக்கப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு நூறு ரூபாயாக இருந்த ரொக்கத் தொகை, ஏழு ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்து ஆயிரம் ரூபாயாக உயா்ந்தது.

இந்த நிலையில், எதிா்வரும் பொங்கல் பண்டிகைக்காக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரூ.2,500 வழங்கப்படும் என்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். இந்த ரொக்கத் தொகையை 2.06 கோடி குடும்ப அட்டைதாரா்கள் பெற உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.