தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிக்கு கரோனா தொற்று

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில் உள்ள மின்சார பராமரிப்புப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜூன் 2020, 5:43 am

DIN


சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில் உள்ள மின்சார பராமரிப்புப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊரியர்கள், 14 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய நிர்வாக அலுவலக விமான நிலையத்துக்கு அருகே அமைந்துள்ளது. இந்த அலுவலகக் கட்டடத்தின் 2வது தளத்தில் கரோனா பாதித்த அதிகாரி பணியாற்றி வந்ததால், அங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த 3 பிரிவுகளும் மூடப்பட்டு மூன்று நாள்களுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. 2வது தளம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.