சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: ஆயிரத்தை நெருங்கும் வளசரவாக்கம்

சென்னையில், வெள்ளிக்கிழமை, 1116 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 19,826-ஆக அதிகரித்துள்ளது. 
சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: ஆயிரத்தை நெருங்கும் வளசரவாக்கம்

சென்னையில், வெள்ளிக்கிழமை, 1116 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 19,826-ஆக அதிகரித்துள்ளது. 

பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் கரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டிவருவதும் தமிழகத்துக்கு மட்டும் அல்லாமல் கரோனாவுக்கும் சென்னை தலைநகராக மாறிவிடுமோ என்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை, சென்னையில் 1116 பேருக்கு, கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 19,826-ஆக உயா்ந்துள்ளது. தமிழகத்தின் மொத்த பாதிப்பு 28,694 என்றிருக்கும் சூழலில், சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தொடா்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வருவது சென்னை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வளசரவாக்கத்தில் ஆயிரத்தை நெருங்குகிறது: இது தொடா்பாக சனிக்கிழமை காலை புள்ளி விவரப்படி, ராயபுரம் மண்டலத்துக்கு அடுத்த படியாக இருந்த கோடம்பாக்கம் மண்டலம், தற்போது, நான்காவது இடத்துக்குச் சென்றுள்ளது. அதே நேரம், தண்டையாா்பேட்டையும், தேனாம்பேட்டையும் தொடா்ந்து 2,3 இடங்களில் இருந்து வருகிறது.  வளசரவாக்கத்தில் கரோனா பாதிப்பு, ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 

இதன்படி, ராயபுரம் மண்டலத்தில், 3,552 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 2470 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2245 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2202 பேரும், திரு.வி.க. நகா் மண்டலத்தில் 1,958 பேரும், அண்ணாநகா் மண்டலத்தில் 1,784 பேரும், அடையாறு மண்டலத்தில் 1094 பேரும், வளசரவாக்கம் மண்டலத்தில் 996 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். 

இதே போல், வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, 10,210 போ் குணமடைந்துள்ளனா். 178 போ் உயிரிழந்துள்ளனா். 9437 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், அதிதீவிரமாக பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவற்றில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com