
தமிழகத்தில் கரோனாவை எதிர்கொள்வதற்கும், பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் ரூ. 9,000 கோடி தேவை என்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் 2-வது நாளாக இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடைபெற்ற இன்றையக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும் பங்கேற்றார்.
அப்போது பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வைத்த முக்கியக் கோரிக்கைகள்:
- மருத்துவ உபகரணங்கள் வாங்க ஏற்கெனவே கோரியிருந்த ரூ. 3,000 கோடி வழங்க வேண்டும்.
- தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், 2-வது தொகுப்பு நிதியை விடுவிக்க வேண்டும்.
- கரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் தமிழகத்துக்கு ரூ. 9,000 கோடி ஒதுக்க வேண்டும்.
- மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை தற்போது விடுவிக்க வேண்டும்.
- கரோனாவை எதிர்கொள்வதற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ. 1,000 கோடி வழங்க வேண்டும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...