கரோனா வைரஸ் சந்தேகத்தின்பேரில் இன்று ஒரே நாளில் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேர் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (37). அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 4 நாட்களுக்கு முன் தமிழகம் திரும்பினார். தொடர்ந்து, அவருக்கு சளித்தொல்லை காரணமாக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு கரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக மேல் சிகிச்சைக்காக அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதேபோல தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த முருகையன் (45) என்பவர் கடந்த 3 நாட்களுக்கு முன் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊர் திரும்பி உள்ளார். அவரும் தனக்கு கொரானா வைரஸ் இருக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரோனோ வைரஸ் சந்தேகத்தின்பேரில் இன்று மட்டும் இரண்டு பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


