அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை: அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் மழலையர் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 மார்ச் 2020, 9:58 am

கரோனா அச்சறுத்தலால் தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் மழலையர் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் இதுதொடர்பாக புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், 'புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் அரசு தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எந்தவொரு பிராந்தியத்திலும் ஏற்றத் தாழ்வின்றி இந்த பணிகள் நடைபெற்றுவருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் ப்ரீ.கே.ஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 16-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.