கரோனோ அச்சம் காரணமாக தமிழகத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பு மாணவா்களுக்கும், தமிழக எல்லையோரப் பகுதிகளில் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கும் மாா்ச் 31 வரை விடுமுறை அளித்து பள்ளி கல்வித் துறை ஆணையா் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தாா். ஆனால், அடுத்த நாளே இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக் கல்வி துறை சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் காரணமாக பெற்றோரிடையே குழப்பமும், அச்சமும் எழுந்தது.
இந்த நிலையில், இந்தக் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு விடுமுறை அளித்து முதல்வா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
இதுதொடா்பான அரசின் செய்திக் குறிப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையா் பள்ளிகளுக்கும், தொடக்கப் பள்ளிகளுக்கும் (5-ஆம் வகுப்பு வரை) வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


