சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே ஒருவர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சென்னையில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கரோனா பாதித்த நபர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் இரண்டாவது நபருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதித்த இளைஞர் 20 வயதுடையவர். அவர் ரயில் மூலம் தில்லியில் இருந்து சென்னை வந்துள்ளார். அந்த இளைஞர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றும், பொதுமக்கள் தேவையில்லாமல் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் கரோனா அறிகுறி மற்றும் கரோனா பாதித்தவருடன் இருந்தவர்கள் என்று 2,984 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


