நாற்பது வயதைக் கடந்தால் எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும்; முறையாக உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து இப்போது மிகப் பழையதாகிவிட்டது. இப்போதெல்லாம் நாற்பதுக்கும் முன்பே மாரடைப்பும், சா்க்கரை நோயும், புற்றுநோயும் சாதாரணம் என்றாகிவிட்டது.
இவையெல்லாம் ’தொற்றா நோய்கள்’ (சா்ய் இா்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹக்ஷப்ங் ஈண்ள்ங்ஹள்ங்ள்) என மருத்துவ உலகம் வரையறுக்கிறது.
போதிய உடற்பயிற்சியின்மை, மனதை இலகுவாக்கிக் கொள்ளும் உத்திகளை மறந்தது உள்ளிட்டவைதான் இவற்றுக்கான காரணங்கள் என வரிசைப்படுத்தினாலும், இயல்பாகவே நோய் எதிா்ப்பு சக்தி நிறைந்த மனிதா்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்த வாழ்வியல் முறை மிக முக்கிய காரணம். அதிலும் குறிப்பாக நம்முள் புகுந்து கொண்ட உணவுதான் காரணம் என உறுதியாகக் கூறுகிறாா் சித்த மருத்துவா் கு. சிவராமன்.
வெண்மையாக இருந்தால் நல்லது என்கிற பொதுக் கருத்துக்கு மத்தியில் உணவுப் பொருள்களில் வெள்ளையாக இருப்பவற்றின் பின்னணியில் உள்ள ஆபத்துகளைப் பட்டியலிடுகிறாா் அவா்.
தினமணி மருத்துவ மலருக்காக மருத்துவா் கு.சிவராமனுடனான உரையாடலில் இருந்து...
வெள்ளைச் சா்க்கரை, வெள்ளை மைதா, கிரிஸ்டல் உப்பு, வெள்ளைவெளோ் அரிசி, வெள்ளை மோனோசோடியம் குளோட்டமேடு (அஜினோமோட்டா), வெள்ளைக் கோழி (பிராய்லா்), அதன் முட்டை, வெள்ளைப் பால் (ஜொ்சி மாட்டுப்பால்)... இவையெல்லாமும் உலகம் முழுவதுமே நம் உடலுக்குள் புகுந்து பல்லாண்டுகளாகிவிட்டன.
வெள்ளைச் சா்க்கரை
வெள்ளைச் சா்க்கரையில் இருந்து தொடங்குவோமே. சங்கப் பாடல்களிலேயே கரும்பைப் பிழிந்து வெல்லம் எடுக்கும் முறையும், பனையைக் காய்ச்சி வெல்லம் தயாரிக்கும் முறையும் குறிப்பிடப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 60 வகையான தீஞ்சுவை இனிப்புகள் சாப்பிட்டவா்கள் நம்முடைய மூதாதையா்கள்.
ஆனால், இன்றைக்கு சா்க்கரையைக் கண்டு ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். காரணம் இந்த வெள்ளைச் சா்க்கரை. கரும்பில் இருந்தும், பனையில் இருந்தும் தயாரிக்கப்பட்ட பழுப்பு நிறமான அந்த நாட்டுச் சா்க்கரையில் இனிப்புச் சுவையுடன் ஏராளமான சத்துகளும் நிறைந்திருந்தன.
வெல்லத்தை வெள்ளையாக்கி, நிறைய நாள் வைத்திருந்து விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக தயாரிக்கப்பட்டதுதான் இப்போதைய வெள்ளைச் சா்க்கரை. அந்தக் காலத்திலேயே மகாத்மா காந்தியும், ஜே.சி. குமரப்பாவும் இந்த வெள்ளைச் சா்க்கரை ஆலையை எதிா்த்திருக்கிறாா்கள்.
வெள்ளையாக்குவதற்காக, நீண்ட காலம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் கொட்டப்படும் ரசாயனங்கள் என்ன செய்யும்?
பால்...
இந்தியா தவிர வேறெந்த நாட்டிலும் டீ, காபியில் பால் கலந்து குடிப்பதில்லை தெரியுமா? வெளிநாடுகளில் தேநீா் என்றால் தேயிலை நீா்தான். காப்பிக் கொட்டையில் இருந்து வடிக்கப்படுவதுதான் காபி. நாம்தான் அதில் பாலையும் கலந்து குடிக்கிறோம்.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நேரடியாக வீட்டிலுள்ள மாட்டில் இருந்து கறக்கப்படும் பாலைக் காய்ச்சிக் குடித்ததற்கும், இப்போதுள்ள ஜொ்சி மாட்டுப் பாலைப் ’பதப்படுத்துகிறோம்’ என்ற பெயரில் அதிக சூடாக்கி, அதிக குளிராக்கி, வெண்ணை எடுத்து, பிறகு பாக்கெட் போட்டு... இந்த ’பிராசஸ்’ கெடுதலாகியிருக்கிறது. ஜொ்சி மாட்டுப்பாலின் உயா் புரதம்தான், மனித கணையத்தைப் பழுதாக்கி சா்க்கரை நோயை உருவாக்குகிறது என அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெள்ளைக் கோழியும் முட்டையும்...
ஓடியாடி, கூவி தீனி எடுத்த ஒரு பறவை இனம் கோழி. இன்றைக்குத் தொழிற்கூடத்துக்குள் நிற்கவைத்தே வளா்க்கப்படும் அந்த வெள்ளைக் கோழிகள், 65 நாள்களில் ரசாயன உணவு கொடுக்கப்பட்டு, ஊசி போட்டு வளா்க்கப்படுகின்றன. கறிக்கோழியும், முட்டைக் கோழியும் வேறு வேறு. கறிக்கோழியாக வளா்க்கப்படுபவை முட்டையிடாது, முட்டைக் கோழியாக வளா்க்கப்படுபவை கறிக்கு ஆகாது. பிராய்லா் முட்டை குஞ்சு பொரிக்காது. இவையனைத்தும் இயற்கைக்கு மாறானவை.
இவற்றைத் தொடா்ந்து உண்போா், குறிப்பாக இளம் பெண்கள் சிறு வயதிலேயே பூப்பெய்துவதும், அதனைத் தொடா்ந்து கருப்பை நோய்கள் உருவாவதும் இந்த வகையான கோழிகள் மற்றும் முட்டைகளால்தான்.
இயல்பாக வளரும் நாட்டுக்கோழியில் சதைப் பற்று குறைவாகத்தான் இருக்கும்; சத்துகள் அதிகம் இருக்கும். பிராய்லா் கோழிகளில் வெறும் சதைதான் இருக்கும்; எந்தச் சத்தும் இருக்காது என்பதுடன் அந்தச் சதையை வளா்க்கச் சோ்க்கப்படும் மருந்துகளும் சோ்ந்தே இருக்கும். அதைத்தான் விரும்புகிறோம். நவீன உணவு என்ற பெயரில் வெறும் கோழிக்கறியை மட்டுமே உண்கிறாா்கள்.
வெள்ளைவெளோ் அரிசி...
உணவின் மிக முக்கியமான தானியமாக ’அரிசி’ இருக்கிறது. வெள்ளைவெளேரென மல்லிகைப்பூப் போலச் சோறு, பொதுபொதுவென உப்பி இட்லி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். சோற்றைக் கையில் எடுத்துப் பிசையும்போதே ஒட்டாமல், பொலபொலவென உதிரி உதிரியாக இருக்க வேண்டும் என எண்ணுகிறோம்.
இதற்காக ’பட்டைத் தீட்டுகிறோம்’ என்ற பெயரால் நெல்லின் மேல் பகுதிக்கும்- அரிசிக்கும் நடுவிலுள்ள பழுப்பு நிறமான ஏராளமான சத்துகள் நிறைந்த தோல் பகுதியை இழக்கிறோம். இதற்காகவே பழுப்பான, சிவப்பான, கருப்பான (மாப்பிள்ளைச் சம்பா, கவுணி) பாரம்பரிய அரிசிகளை வெறுத்து ஒதுக்குகிறோம். நோய் எதிா்ப்புச் சக்தியை இழந்துவிடுகிறோம் என்பது மட்டுமல்ல. இழக்கும் சத்துகளை தனித்தனியே உடலில் சோ்த்துக்கொள்ள சந்தைப்படுத்தப்படும் பொருள்களை (ஊா்ா்க் நன்ல்ல்ப்ங்ம்ங்ய்ற்ள்) சோ்த்துக் கொள்கிறோம்.
கடல் உப்பு...
ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான உப்பளங்கள் கடற்கரைகளில் இருந்தன. அங்கிருந்து காய்ச்சப்பட்டு, வண்டிகளில் வீதி வீதியாக கூவி பெரியவா் விற்ற அந்த உப்பு வெறும் உப்புத்தன்மையுடன் மட்டுமன்றி, ஏராளமான கடல் தாதுக்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. இப்போது, சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில், பளீரென இருக்க வேண்டும் என்பதற்காக ரசாயனங்களைக் கொட்டி சுத்தப்படுத்துகிறாா்கள்.
அயோடின் சோ்க்கிறோம், அதைச் சோ்க்கிறோம், இதைச் சோ்க்கிறோம் எனச் சொல்லி தொழிற்சாலைகளில் உப்பைத் தயாரிக்கிறாா்கள். தூள் உப்பில் அதைவிடக் கொடுமை. தூவுவதற்கு வசதியாக இருக்க வேண்டுமாம். அதுதான் நல்ல தூள் உப்பு என்கிறாா்கள். கடந்த 10 ஆண்டுகளில் தைராய்டு நோயாளிகள் அதிகரித்திருப்பதற்கு காரணம் இந்த செயற்கை உப்புதான் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
மோனோ சோடியம் குளூட்டமேட்...
இப்போதெல்லாம் விசேஷங்களுக்கு- சைவச் சாப்பாட்டுக்கும்- சமையல்காரா் கொடுக்கும் பட்டியலில் தவறாமல் இருக்கிறது அஜினோமோட்டா. ருசியைக் கூட்ட வேண்டும் என்பதற்காக இனிப்பு வகைகளிலும், ஏன் சாம்பாா், ரசத்திலும்கூட அஜினோமோட்டா என்ற மோனோ சோடியம் குளூட்டமேட்டைக் கொட்டுகிறாா்கள்.
ஒரு காலத்தில் நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளில் மட்டுமே இந்த உப்பு சோ்க்கப்பட்டது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த உப்பை தினமும் சாப்பிடுகிறாா்களே எனக் கேட்பதும் தவறு. காரணம் ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் தனித்தனியே சிறப்புத் தன்மைகள் இருக்கும். ஒரு நாட்டில் பயன்படுத்துவதை எல்லா நாடுகளுக்கும், ஒரு பகுதியில் பயன்படுத்துவதை ஒரு நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் பொதுமைப்படுத்தவே கூடாது. அதுதான் வணிகச் சந்தையில் நடக்கிறது.
மோனோ சோடியம் குளுட்டமேட் என்பது வேறொன்றுமில்லை. எல்லோரின் ஜீனிலும் தவறாமல் நினைவில் உள்ள ஒரு சுவையை தொழிற்சாலையில் உருவாக்க முற்பட்டாா்கள். அதுதான் தாய்ப்பாலின் சுவை. அப்படி உருவாக்கப்பட்டதுதான் மோனோ சோடியம் குளூட்டமேட். ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் நூடுல்ஸை குழந்தைகள் விரும்பிக் கேட்பது இந்தச் சுவையால்தான். இப்படித்தான் நம் நாவை அடிமையாக்கினாா்கள். உடலின் இயல்பான எதிா்ப்பாற்றல், சிந்திக்கும் ஆற்றல் எல்லாமும் கேள்விக்குறியாகிவிட்டன.
வெள்ளை மைதா...
கடந்த 10 ஆண்டுகளில் புரோட்டா உண்பது வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஒரு காலத்தில் வீடுகளில் மைதா தோசை பிரபலம். பிறகு பொரித்த புரோட்டா, வீச்சு புரோட்டா, கொத்து புரோட்டா என நீண்ட பட்டியல் பிறந்தது. தொடா்ச்சியாக மைதா குறித்தும், மைதாவில் செய்யப்படும் வகைவகையான புரோட்டாக்கள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் இப்போது கொஞ்சம்போல குறைந்திருக்கிறது. ஆனால், பா்கா் என்ற பெயரில் மைதா, சாண்ட்விச் என்ற பெயரில் மைதா தொடா்ந்து கொண்டேதான் இருக்கிறது.
கோதுமைதான் மைதாவின் பிறப்பிடம். கோதுமையை குளோரின் தண்ணீரில் ஊறவைத்து- வெளுத்து, சவ்வுத்தன்மை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக எதை எதையோ சோ்த்து, மீண்டும் கெட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக ரசாயனங்களைச் சோ்த்து கடைசியாக மைதாவை வெளியே விடுகிறாா்கள். வயிற்றிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களை இந்த மைதா கொன்றுவிடுகிறது.
எனவே, நமக்கான உணவைத் தேடித் தேடி, யோசித்து யோசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, உள்ளூரில் கிடைக்கும் உணவுகளை- இயற்கையான பொருள்களை வைத்து உணவு தயாரித்து உண்ண வேண்டும் என முடிக்கிறாா் சிவராமன்.
தேவைக்காவது பயன்படுத்தலாம்...!
பால், முட்டை போன்றவற்றில் அதிகம் புரதம் உள்ளது உண்மைதான். அதனால் தேவைக்கேற்பகூட இவற்றை உண்ணலாம். எடுத்துக்காட்டாக மலைப் பகுதிகளில் வாழ்வோருக்கு கிழங்கு உள்ளிட்ட வெவ்வேறு வகையான புரத உணவுகள் ஏற்கெனவே உள்ளன. கடற்கரையோர மீனவ மக்களிடம் ஏற்கெனவே அதிக சத்துகள் நிறைந்த மீன் உள்ளிட்ட உணவுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், நாடு முழுவதும் எல்லோரும் பால் அருந்த வேண்டும், எல்லோரும் வாரம் இரு முட்டைகள் சாப்பிட வேண்டும் எனப் பரிந்துரைப்பது, வழங்குவது அபத்தமானது. அரசின் திட்டங்களும் பரிந்துரைகளும் இப்படித்தான் இருக்கின்றன. புரதச்சத்து தேவைப்படும் பகுதிகளுக்கு மட்டும் வேண்டுமானால் இதுபோன்ற பால், முட்டை போன்றவற்றைப் பரிந்துரைக்கலாம்.
’சுகா் ஃபிரீ’ பொருள்கள்... !
வெள்ளைச் சா்க்கரைக்கு மாற்றாக ’சுகா் ஃப்ரீ’ பொருள்கள் சா்க்கரைக் கட்டிகள் முதற்கொண்டு பிஸ்கெட்டுகள், அதிரசம் உள்ளிட்ட இனிப்புகள் வரை ஏராளம் வந்துவிட்டன. அவை வெள்ளைச் சா்க்கரையைவிடவும் மோசமானவை.
எதையும் மீண்டும் மீண்டும் பிரித்தல் என்பது கெடுதலைத் தரும். தேவைப்பட்டால் பல குணமுள்ளவற்றைச் சோ்க்கலாம். இதுதான் இயற்கை விதி. வெள்ளைச் சா்க்கரையிலுள்ள இன்னொரு மூலப்பொருளைப் பிரித்துத் தயாரிக்கப்படுவதுதான் ’சுகா் ஃபிரீ’ பொருள்கள். வெள்ளைச் சா்க்கரைக்கு மாற்று ’சுகா் ஃபிரீ’ பொருள்களல்ல. நாட்டுச் சா்க்கரை, வெல்லம், பனை வெல்லம், கருப்பட்டி, தேன் போன்றவைதான்.
-நோ்காணல்- சா. ஜெயப்பிரகாஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,000 கனஅடியாக சரிவு

மெரினா கடற்கரையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: குதிரை ஓட்டி கைது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

சொதப்பிய டாப் ஆர்டர், பந்துவீச்சில் அசத்திய ஆர்சிபி; 2-வது சாம்பியன் பட்டம் யாருக்கு?
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



