தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருச்சியில் ஒருவருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்வு

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.  துபையில் இருந்து திருச்சி வந்த இளைஞருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :26 மார்ச் 2020, 12:22 pm

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. துபையில் இருந்து திருச்சி வந்த இளைஞருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த செவ்வாய்க்கிழமை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 18 ஆக இருந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து துபையில் இருந்து திருச்சி வந்த 24 வயதான ஆண் ஒருவருக்கு கரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

திருச்சி மாவட்டத்துக்கு துபை, சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 640 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 14 பேர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனோ பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைளிக்கப்பட்டது. இவர்களில் யாருக்கும் கரோனோ தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், வியாழக்கிழமை ஒருவருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சுட்டுரை பக்கத்திலும் உறுதி செய்துள்ளார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நபருக்கு தொற்று இருப்பதை மருத்துவமனை வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன. இதையடுத்து அரசு மருத்துவமனையில் கூடுதல் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு வேறு நபர்கள் உள்ள நுழைய அனுமதியளிக்கப்படவில்லை. திருச்சி மாவட்டத்திலும் கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.