சலிம் அலி பிறந்த நாள் விழா மற்றும் வெடியில்லா தீபாவளி கையெழுத்து இயக்கம்

ஆழ்வார்குறிச்சி அருகே வாகைக்குளத்தில் பறவை மனிதன் சலிம் அலி 124 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் வெடியில்லா தீபாவளி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

வெடியில்லா தீபாவளி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார் சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி

Published On :



அம்பாசமுத்திரம்: ஆழ்வார்குறிச்சி அருகே வாகைக்குளத்தில் பறவை மனிதன் சலிம் அலி 124 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் வெடியில்லா தீபாவளி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் பல்வேறு வகையான அரிய வகை பறவைகள் வந்து கூடு கட்டி குஞ்சு பொறித்து செல்வது வழக்கம். இதனால் வாகைக்குளம் அருகில் உள்ள நாணல் குளத்தில் பொதுமக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளிக்கு வெடி வெடிப்பதில்லை. மேலும் கிராமத்து இளைஞர்கள் குளத்திற்கு வரும் பறவைகளுக்கு யாரும் இடையூறு செய்யாமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளிக்கு நாணல்குளம் மக்கள் வெடி வெடிக்காததையடுத்து ஆண்டு தோறும் மணிமுத்தாறு, அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வளகாப்பு மையம் சார்பில் வெடியில்லா தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.

Story image

வெடியில்லா தீபாவளி கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

நிகழாண்டு வெடியில்லா தீபாவளியை முன்னிட்டு பறவை மனிதன் சலிம் அலி பிறந்த நாள் மற்றும் வெடியில்லா தீபாவளி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி, பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி செயலர் சுந்தரம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பரமகல்யாணி சுற்றுச் சூழல் ஒப்புயர்வு மையத்தலைவர் அண்ணாதுரை, செந்தில்நாதன், முரளிதரன், சொர்ணம், மாவட்ட அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் செண்பக கோபால், உஷா, பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் பேட்ரிக் டேவிட், மரிய அந்தோணி, தளவாய்ப்பாண்டி மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 2ஆவது சனிக்கிழமை தென்காசி மாவட்டத்திலுள்ள குளங்களில் பறவைகள் கண்காணிப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவித்தனர்.

Story image

வெடியில்லா தீபாவளி கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வளப் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், தமிழழகன், தேசியப் பசுமைப் படை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பரமகல்யாணி சுற்றுச் சூழல் ஒப்புயர்வு மையம், ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி ஆகியோர் இணைந்து  செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.