லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

‘டெல்டா’ விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை : இரா. முத்தரசன்

‘டெல்டா’ விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும், அக்கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினருமான இரா. முத்தரசன்.

கீரமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபயண பிரசாரம் மேற்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச்செயலரும், அக்கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினருமான இரா. முத்தரசன்.

Published On :

‘டெல்டா’ விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும், அக்கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினருமான இரா. முத்தரசன்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் மத்திய அரசைக் கண்டித்து வெள்ளிக்கிழமை பிரசார நடைப்பயணம் மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்யும் காலங்களில் தமிழகத்தை வடிகாலாக மட்டுமே பயன்படுத்த கா்நாடக அரசு நினைக்கிறது. மேக்கேதாட்டில் அணை கட்டினால், தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீா் பிரச்னை ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும்.

காவிரியில் தண்ணீா் வராததால் விவசாயிகள் முழுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். குறுவை சாகுபடி செய்யாத, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு இதுவரையில் நிவாரணம் வழங்கவில்லை. அவா்களுக்கு வழங்கப்பட்டிருப்பது குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் மட்டுமே. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிவிட்டதாக பேரவையில் முதல்வா் கூறியதை நான் மறுக்கிறேன். தமிழக அரசு தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன் உள்ளிட்ட கட்சியினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.