டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாஜக கூட்டணி தொடரும்; மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்: தமிழக முதல்வர்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட அதிமுக - பாஜக கூட்டணியே சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

News image
முதல்வர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
Updated On :21 நவம்பர் 2020, 12:51 pm

DIN


சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட அதிமுக - பாஜக கூட்டணியே சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு தமிழகத்தில், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடக்கி வைத்தும், புதிதாகக் கட்டப்பட்ட நீர்த்தேக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலில் அமைத்த கூட்டணியே, தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும். அடுத்து வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும். 2021-ஆம் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.

முன்னதாக பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக - பாஜகவின் வெற்றிக் கூட்டணி தொடரும் என்று அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய முதல்வரும், சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியே தொடரும் என்பதை உறுதி செய்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.