கடலூரில் புயல், வெள்ள சேதத்தை ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், புயல் மற்றும் வெள்ள சேதத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார்.


தமிழகத்தில் நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், புயல் மற்றும் வெள்ள சேதத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி நேற்று நள்ளிரவில் புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்த அதிதீவிர நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வாழை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன. கடலூர் மாவட்டம் மனம்பாடி கிராமத்தில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்த நிலையில், இன்று காலை சென்னையிலிருந்து கடலூர் மாவட்டத்துக்கு சாலை மார்கமாக பிற்பகலில் சென்றடைந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி பகுதியில் உள்ள குமாரமங்கலத்தில், பலத்த காற்றால் சாய்ந்து போன வாழை மரங்களை நேரில் பார்த்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
முன்னதாக அவருக்கு கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் கீழ் குமாரமங்கலம் பகுதியில் புயலினால் பாதிக்கப்பட்ட வாழை மரங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பல்வேறு கிராமங்கள் வழியாகச் சென்று தேவனாம்பட்டினத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களை தங்க வைக்கப்பட்டிருக்கும் பள்ளி முகாமுக்குச் சென்றார்.
தேவனாம்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புயல் பாதுகாப்பு மையத்தில் மக்களை நேரில் சந்தித்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. அங்கு மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் சரியாகக் கிடைக்கிறதா என்று வயதான முதியவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பாதுகாப்பு மையத்தில் தங்கியிருந்தவர்களின் உடல்நிலை குறித்தும் முதல்வர் தனித்தனியாகக் கேட்டு நலம் விசாரித்தார்.

புயல் பாதுகாப்பு மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ வசதிகளையும் முதல்வர் பழனிசாமி நேரில் பார்வையிட்டார். அங்கு தங்கியிருக்கும் பொதுமுக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய பெட்டகத்தையும் முதல்வர் வழங்கினார்.
கடலூர் முதுநகர் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
கடலூர் துறைமுகப் பகுதிக்கு வந்த முதல்வர் பழனிசாமி, அங்கு புயலால் சேதமடைந்த விசைப் படகுகளை நேரில் பார்வையிட்டு, மீனவ பிரதிநிதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். ஆய்வின் போது பொதுமக்கள் அளித்த மனுக்களையும் முதல்வர் பெற்றுக் கொண்டார்.
ஆய்வின் போது அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி, ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...