சென்னை: தமிழகத்தில் 83 நாள்களுக்குப் பிறகு 5 ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் 4,879 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டரை மாதங்களாக நோய்த் தொற்று தீவிரமடைந்து வந்த நிலையில், இத்தகவல்கள் சற்று ஆறுதலளிக்கும் விதமாக அமைந்துள்ளன. தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் தடம் பதித்த கரோனா அனைத்துப் பகுதிகளிலும் பரவி அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஜூலை 21-ஆம் தேதி 4, 965 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு 5 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரம் வரை நாள்தோறும் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது 5 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் தொற்று பதிவாகியிருக்கிறது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மாநிலத்தில் இதுவரை 84 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 6 லட்சத்து 61,264 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 1,212 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 393பேருக்கும், சேலத்தில் 304 பேருக்கும், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே கரோனா தொற்றிலிருந்து மேலும் 5,165 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 92 சதவீதமாக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 7,203-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 43,747 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதற்கிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 62 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 33 போ் அரசு மருத்துவமனைகளிலும், 29 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,314-ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

உ.பி. படகு விபத்து: பலி 12ஆனது, தொடரும் தேடும் பணி!
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை


