செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் கோவில் புரத்தில் ஒரே கருஙகல்லிலால் 51 அடி உயரத்தில் எழுந்தருளி இருக்கும் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
_.jpeg)
வெள்ளிக்கிழமை ஆங்கில புத்தாண்டையொட்டி கோ பூஜை, ஹோமம் , விநாயகர், 51 அடி உயர அம்மன், சொர்ணாம்பிகை அம்மன், சர்வதேச கரிய நாக் சொரூபிணி அம்மன் வாராகி, துர்காதேவி உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
_.jpeg)
இதேபோல் ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோயிலில் பெருமாளுக்கும் 108 திவ்ய தேசங்களில் உள்ள பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை இருந்து தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர் மதுரை முத்து சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோன்று இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு சக்தி விநாயகர் கோயிலில் விநாயகர், முருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
_.jpeg)
பக்தர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









