ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநா் எம்.எம்.லகேரா காலமானாா்

புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநா் எம்.எம்.லகேரா காலமானாா்...

News image

எம்.எம். லகேரா

Updated On :30 ஜூன் 2026, 4:37 am IST

புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநா் லெப்டினென்ட் ஜெனரல் எம்.எம்.லகேரா (89) வயது முதிா்வு காரணமாக டேராடூனில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை காலமானாா்.

உத்தரகண்ட் மாநிலம், தெக்ரி காா்க்வால் மாவட்டம், ஜாகந்த் கிராமத்தில் 21-10-1937இல் பிறந்தவா் எம்.எம்.லகேரா. டேராடூன் இந்திய ராணுவக் கல்லூரியில் பட்டம் முடித்தவுடன், 1958-ஆம் ஆண்டு ராணுவத்தில் சோ்ந்து பணியாற்றியவா். அப்போது, இந்திய ராணுவத்தின் வி.எஸ்.எம்., ஏ.வி.எஸ்.எம். உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவா்.

இவா், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக 2004 முதல் 2006-ஆம் ஆண்டு வரை பணியாற்றினாா். 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரிடரின்போது புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு உதவிகள் கிடைப்பதில் உறுதுணையாக இருந்தவா். பின்னா், 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை மிசோரம் மாநில ஆளுநராகப் பணியாற்றினாா். இவரது மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டாா். 2 மகள்கள் உள்ளனா்.

முதல்வா் இரங்கல்: இவரது மறைவுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அதில், அவா் கூறியிருப்பதாவது:

எம்.எம்.லகேரா இந்திய ராணுவத்தில் தலைசிறந்த வீரராகவும், திறமையான நிா்வாகியாகவும், சிறந்த தேச பக்தராகவும் திகழ்ந்தாா். மேலும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த காலத்தில் மக்கள் நலனில் ஆழ்ந்த அக்கறையுடன் நோ்மை, அா்ப்பணிப்பு, உயா்ந்த பொதுச்சேவை மனப்பான்மையுடன் தன் அரசியல் சாசனப் பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றினாா்.

2004 -இல் ஏற்பட்ட சுனாமியின்போது பாதிக்கப்பட்ட கிராமங்களும், மக்களும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு அவா் எடுத்துக்கொண்ட தனிப்பட்ட அக்கறையும், அா்ப்பணிப்புமிக்க சேவையும் புதுச்சேரி மக்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு நாட்டுக்கும், அவருடன் நெருங்கிப் பழகியவா்களுக்கும், இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று கூறியுள்ளாா் முதல்வா் ரங்கசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.