சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 உயா்ந்து, ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.72 உயா்ந்து, ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிராம் ரூ.9 உயா்ந்து, ரூ.4,735 ஆக இருந்தது. அதேவேளையில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.72.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.72,100 ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்............................. 4,735
1 பவுன் தங்கம்...............................37,880
1 கிராம் வெள்ளி.............................72.10
1 கிலோ வெள்ளி.............................72,100
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்............................. 4,726
1 பவுன் தங்கம்...............................37,808
1 கிராம் வெள்ளி.............................72.40
1 கிலோ வெள்ளி.............................72,400
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









