அதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? அன்புமணி ராமதாஸ்

மத்திய அரசின் 125 நாள் வேலை உறுதித் திட்டம் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

News image

பாமக தலைவர் அன்புமணி - எக்ஸ்

Updated On :29 ஜூன் 2026, 5:10 am IST

மத்திய அரசின் 125 நாள் வேலை உறுதித் திட்டம் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 100 நாள்கள் வேலை வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சில மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது.

அதன்படி, ஜூலை 1-ஆம் தேதி முதல் 100 நாள்களுக்குப் பதிலாக 125 நாள்கள் வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு சில நாள்களே உள்ள நிலையில், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் 125 நாள்கள் வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன.

ஆனால், தமிழக அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பான நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. இந்தத் திட்டத்தில் மாநில அரசுகளின் பங்கு 40 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளதால், தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் வாய்ப்புள்ளது. இத்திட்டம் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன.

எனவே, 125 நாள்கள் வேலை உறுதித் திட்டத்தின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து அந்தத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுமா? என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.