திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சங்ககிரியில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி 70 பேர் திமுகவில் இணைப்பு 

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி சங்ககிரி திமுக  ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 6:17 pm IST

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மோரூர் கிழக்கு, சின்னாகவுண்டனூர் ஆகிய இரு  ஊராட்சிகளில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி சங்ககிரி திமுக  ஒன்றிய அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 

திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலர் பொறுப்பு டி.எம்.செல்வகணபதி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சங்ககிரி ஊராட்சி ஒனறியத்திற்குள்பட்ட மோரூர்கிழக்கு, சின்னாகவுண்டனூர் ஆகிய இரு ஊராட்சிகளிலிருந்து பல்வேறு மாற்றுக்கட்சிகளிலிருந்தும் மற்றும் மோரூர் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சேகரிஈஸ்வரன் உள்பட 70 பேர்   திமுகவில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களை அவர் வரவேற்று துண்டுகளை அணிவித்து வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டுமென்றார். 

சங்ககிரி ஒன்றியச் செயலர் பொறுப்பு கே.எம்.ராஜேஷ் முன்னிலை வகித்தார். 

சங்ககிரி முன்னாள் எம்எல்ஏ ஆர்.வரதராஜன், மாவட்ட துணைச் செயலர் சம்பத்குமார், முன்னாள் ஒன்றிய செயலர் பி.தங்கமுத்து, நகரச்செயலர் சுப்பிரமணி, முன்னாள் நகரச் செயலர் முருகன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் கே.ஜீ.ஆர். ராஜவேலு, செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.