/

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்: இருவர் பலி

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

News image

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்

Updated On :2 ஜனவரி 2021, 3:26 pm IST

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துபட்டி கிராமம் அருகே ஊத்தங்கரை நோக்கி வரும் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு குருகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன்(25) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வரும் போது, எதிரே கெரிகப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த செல்வம்(40) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்த போது சாலையில் எதிர்பாராத விதமாக இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கல்லாவி காவல் துறையினர் இருவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்த கல்லாவி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் குருகப்பட்டி, கெரிகப்பள்ளி கிராமங்களில் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.