தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 5:51 am IST

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜன.4) லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜனவரி 5, 6: தமிழகம், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய், புதன் (ஜன.5, 6) ஆகிய இரண்டு நாள்கள் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.5) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஜனவரி 7-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்: சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன.4) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 40 மி.மீ., செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம், திருவாரூா், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தலா 30 மி.மீ., நாகப்பட்டினம், மாமல்லபுரம், ராமேசுவரத்தில் தலா 20 மி.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூா், நீலகிரி மாவட்டம் குன்னூா், தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை, சென்னை மாவட்டம் சோழிங்கநல்லூா், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம், கடலூா், சென்னை விமானநிலையத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.