தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

தமிழக-கேரள எல்லை கம்பமெட்டில் பறவைக் காய்ச்சல் தடுப்பு முகாம்

கேரளாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக தமிழக கேரள எல்லையான தேனி மாவட்டம் கம்பம்மெட்டு பகுதியில் கால்நடைத்துறை சார்பில் பறவைக் காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

News image

தமிழக-கேரள எல்லை கம்பமெட்டில் பறவைக் காய்ச்சல் தடுப்பு முகாம்

Updated On :5 ஜனவரி 2021, 3:20 pm IST

கேரளாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக தமிழக கேரள எல்லையான தேனி மாவட்டம் கம்பம்மெட்டு பகுதியில் கால்நடைத்துறை சார்பில் பறவைக் காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பறவை கய்ச்சல் எதிரொலியாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் கால்நடை மற்றும் பறவைகள் கொண்டு வரும் சரக்கு வாகனங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளை ஏற்றி, இறக்கி விட்டுத் திரும்பும் வாகனங்களை முழுவதுமாக ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளித்து அனுப்பப்படுகிறது.

அதேபோல் தமிழகத்திலிருந்து கம்பம்மெட்டு மலைச்சாலை வழியாக பிராய்லர் கோழி, முட்டை மற்றும் கால்நடைகள் கொண்டு செல்லும் வாகனங்களைப் பரிசோதித்து மருந்து தெளித்து அனுப்பி வருகின்றனர்.

முகாமில் கம்பம் கால்நடை மருந்தக மருத்துவர் ராஜா மோகன் பரமசிவம் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் வாகனங்களைச் சோதனை செய்து வருகின்றனர்.

இதுபற்றி கால்நடை மருத்துவர் ராஜா மோகன் பரமசிவம் கூறும்போது,

தமிழகத்தில் பறவை காய்ச்சல் இல்லாததால் பிராய்லர் கோழி மற்றும் முட்டைகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் கேரளாவிலிருந்து தமிழகம் வரும் கால்நடை வாகனங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது, காலியாக வரும் வாகனங்களில் ஸ்பிரேயர் மூலம் வைரஸ் தொற்று பரவுதல் தடுக்க மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.