தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து புதன்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.
ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் செவ்வாய்க்கிழமை தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து இரண்டு அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், பேரருவியில் இரண்டாவது நாளும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை பேரருவியில் தண்ணீரின் சீற்றம் குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்க்கு அழைப்பு! கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்!!

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 50 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

பெட்ரோல், டீசல் நிரப்ப படையெடுத்த வாகன ஓட்டிகள் - புகைப்படங்கள்

‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது
விடியோக்கள்

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

