துறையூர்: துறையூர் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்ற போது நிதி ஒதுக்கவில்லையெனக் கூறி வெளி நடப்பு செய்த உறுப்பினர்களில் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் தலைவர் சரண்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் புவனேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ம. செந்தில்குமார்(வட்டாரம்), ஏ. சாமிநாதன்(கிராம ஊராட்சிகள்) முன்னிலை வகித்தனர்.
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரூபிணி, புனிதா, லலிதா, அசோகன், சின்னம்மாள், சதீஸ்குமார், சரசு, சரண்யாஜெய்சங்கர், தங்கராஜ், சிவகுமார், ரெங்கசாமி, சுபாஷ், பேபி, சுப்பிரமணியன், மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மன்ற அனுமதிக்காக வைக்கப்பட்ட 24 தீர்மானங்களை பெரும்பான்மை உறுப்பினர்கள் அங்கீகரித்ததால் அவை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் உறுப்பினர்கள் அசோகன், சிவகுமார், சின்னம்மாள் சின்னசாமி, லலிதா கண்ணன் ஆகிய நான்கு பேரும் 2020-21 நிதியாண்டுக்கான 15வது நிதிக்குழு நிதி ரூ. 1.63 கோடியில் தங்கள் வார்டுகளுக்கு நிதி ஒதுக்கவில்லையென்றும், தங்கள் வார்டுகளில் மேற்கொள்ள உள்ள பணிகள் தொடர்பாக தங்களிடம் கருத்து கேட்காமல் நேரடியாக மக்களிடம் கோரிக்கை மனு பெற்று பணிகள் தேர்வு செய்திருப்பதையும், இது போன்ற நடவடிக்கைகளால் ஒன்றிய நிர்வாகம் தங்களை அவமதிப்பதாகவும் கூறி தலைவர் மேசை முன்பு தர்ணா செய்தனர். தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற அறையிலிருந்து நான்கு பேரும் வெளி நடப்பு செய்தனர். அப்போது திடீரென 10வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினரான தேமுதிக நிர்வாகி சொரத்தூர் பி. சிவகுமார் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தன்னை நிர்வாகம் அவமதிப்பதாகவும், இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொள்ள தடை விதித்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கூறி திடீரென தன்மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அருகில் இருந்து இதனைக் கவனித்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி, உடை மாற்றம் செய்ய உதவினர். இதனையடுத்து அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. கருத்து வேறுபாடு கொண்ட உறுப்பினர்களுக்கும், தலைவர் தரப்புக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ. சாமிநாதன் கூறியது, மத்திய அரசின் 15வது நிதிக்குழு நிதி துறையூர் ஒன்றியத்துக்கு ரூ. 1.63 கோடி ஒதுக்கப்பட்டு 25 சதவிகிதம் நிதி மட்டும் வரப்பெற்றுள்ளது. இந்த நிதியில் பிரதமரின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. 75 சதவிகித நிதி இன்னும் வழங்கப்படவில்லை என்றார்.
இந்த நிலையில் வெளிநடப்பு செய்ததற்காக ஒன்றியக்குழு தலைவர் சரண்யாவின் கணவர் மோகன்தாஸ் தன்னை மிரட்டியதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு துறையூர் காவல்நிலையத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார் புகார் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேவைக் குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 1.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
பள்ளி சிறுவனிடம் வெள்ளி சங்கிலி பறித்த இருவா் கைது

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு இசிஜி எடுத்த பாதுகாவலா்

பழவேற்காடு மீனவா் கிராம கலவர வழக்கு: நீதிமன்றத்தில் 150 போ் ஆஜா்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



