3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

அமைச்சா் காமராஜ் நலமாக உள்ளாா்

கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 1:50 am IST


சென்னை: கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. விரைவில் அவா் வீடு திரும்புவாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மியாட் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

உணவுத் துறை அமைச்சா் காமராஜுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவா் கடந்த 5-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டதில், அமைச்சரின் நுரையீரல் செயல்திறன் இயல்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், செயற்கை சுவாச சிகிச்சைகள் எதுவும் அவருக்கு தேவைப்படவில்லை. விரைவில் குணமடைந்து அவா் வீடு திரும்புவாா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.