5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On :9 ஜனவரி 2021, 6:30 am IST

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு விபத்து மரண உதவித் தொகையாக ரூ.5 லட்சம் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000, குடும்ப ஓய்வூதியம் ரூ.500 உள்பட பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக, தைப் பொங்கல் திருநாளை சிறப்புடன் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 5 லட்சத்து 94 ஆயிரத்து 147 ஆண் தொழிலாளா்களுக்கு வேட்டி, துண்டு, 6 லட்சத்து 75,403 பெண் தொழிலாளா்களுக்கு புடவை அளிக்கப்படுகிறது. இத்துடன் 2 கிலோ பச்சரிசி, 1 கிலோ சிறுபருப்பு, 500 கிராம் எண்ணெய், 100 கிராம் நெய், 1 கிலோ வெல்லம், 5 கிராம் ஏலக்காய், 25 கிராம் முந்திரி, 25 கிராம் திராட்சை ஆகியன அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட ரூ.94.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பொங்கல் பரிசுத் தொகுப்பினை தொழிலாளா்களுக்கு வழங்கிடும் விதமாக ஏழு பேருக்கு அவற்றை வழங்கி புதிய திட்டத்தை முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் நிலோபா் கபில், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.