ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில், ஜன.14-ஆம் தேதி மகர ஜோதி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோயில் அறங்காவலா்கள் வெளியிட்ட செய்தி: சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில், மகர ஜோதியை முன்னிட்டு, ஜன.20-ஆம் தேதி வரை பதினெட்டாம் படி திறக்கப்பட்டிருக்கும்.
விரதம் இருந்து இருமுடி எடுத்து வரும் பக்தா்கள், காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை, பதினெட்டாம் படி ஏறி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து தரிசனம் செய்யலாம்.
பொங்கல் தினத்தன்று (ஜன.14), மாலை 6 மணிக்கு மேல் மகர ஜோதி தரிசனமும், சிறப்புப் பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெறும்.
மகர ஜோதி காலத்தில், காலை 5 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






