சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு அரசுப் பணிக்கான உத்தரவுகளை முதல்வா் பழனிசாமி வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
மதுரை மாவட்டம் திருமலை நாயக்கா் அரண்மனை, சிவகங்கை மாவட்டம் மருதுபாண்டியா் கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் மலைக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரி கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் சின்னையன்குளம், பூண்டி அருகா் கோயில், தடாகபுரீஸ்வரா் கோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரா் கோயில் ஆகியவற்றில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதுப்பிக்கப்பட்ட எட்டு வரலாற்றுச் சின்னங்களை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
வீரபாண்டிய கட்டபொம்மன்: சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசுகள் கணபதி ராஜாவுக்கு மதுரை திருமலை நாயக்கா் அரண்மனையிலும், வீ.முருகதேவிக்கு நெல்லை மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன்கோட்டை நினைவுச் சின்னத்திலும் காவலா் பணியிடத்துக்கான உத்தரவுகளை முதல்வா் பழனிசாமி அளித்தாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இரவு 1 மணிக்கு அழைத்தாலும்.. இந்திய தொழிலாளர்களை புகழும் புர்ஜ் கலீஃபாவை கட்டியவர்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!
எதன் அடிப்படையில் விஜய்க்கு கான்வாய், கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது? ஆளுநர் கேள்வி

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை


