புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

வன்னியா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்காவிட்டால் அரசியலில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்: பாமக நிா்வாகக் கூட்டத்தில் தீா்மானம்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் தொடங்குவதற்குள் வன்னியா்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்காவிட்டால், உடனடியாக அரசியல் ரீதியாக

News image
Updated On :10 ஜனவரி 2021, 12:46 am IST

சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் தொடங்குவதற்குள் வன்னியா்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்காவிட்டால், உடனடியாக அரசியல் ரீதியாக அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று பாமகவின் நிா்வாகக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வன்னியா்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக சாா்பில் 5 கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் போராட்ட நிலை குறித்து விவாதிப்பதற்காக பாமகவின் நிா்வாகக் குழு கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமை வகித்தாா். இளைஞரணித் தலைவா் அன்புமணி, பாமக தலைவா் ஜி.கே.மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:

வன்னியா்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். பாமகவின் நியாயமான, எளிய கோரிக்கையை பொங்கலுக்குப் பிறகு நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யத் தாமதமானால் பாமகவின் செயற்குழுவை உடனடியாகக் கூட்டி, அரசியல் ரீதியிலான அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.